அரசியலில் நுழையும் எண்ணமோ, அரசியல்வாதிக்குரிய தகுதியோ எனக்குக் கிடையாது. ஆள்காட்டி விரலில் மை வைத்துக் கொள்ளும் அளவுக்குதான் எனக்குத் தகுதி உள்ளது என கலைஞானி கமல்ஹாசன் கூறியுள்ளார்.அரசியல் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியொன்றில் அவர் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
பொதுவாக எந்த ஒரு தொழிலில் ஈடுபடுவதாக இருந்தாலும் அதற்கு தனித் தகுதியும் திறமையும் வேண்டும். அரசியலுக்கும் அப்படி ஒரு தகுதி தேவைப்படுகிறது. எனக்கு அந்தத் தகுதி இருப்பதாக நான் நினைக்கவில்லை. அதேபோல அரசியல் குறித்த எனது பார்வைகளைக் கூட எந்த ஒரு பொது மேடைகளிலும் வைத்து நான் பகிரந்து கொண்டதில்லை.
No comments:
Post a Comment